வளமான அஸ்ஸாமை பின்தங்கிய மாநிலமாக்கிவிட்டது காங்.: பிரசார கூட்டத்தில் மோடி தாக்கு
குவஹாத்தி: வளம் வாய்ந்த அஸ்ஸாமை காங்கிரஸ் அரசுகள் மிகவும் பின் தங்கிய மாநிலமாக்கிவிட்டது என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அஸ்ஸாம் சட்டசபைக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக தருண் கோகாய் தலைமையில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸை இந்த முறை அகற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் அஸ்ஸாமில் பாஜக தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 91 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்ற தொகுதிகளை தன் கூட்டணி கட்சியான அஸ்ஸாம் கண பரிஷத் மற்றும் 2 சிறிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. தற்போது அம்மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இநிலையில் பிரதமர் மோடி இன்று அஸ்ஸாமின் தின்சுகியாவில் பிரச்சாரத்தை தொடங்கினார். மோடி தமது பிரசாரத்தின் போது, வளமான அஸ்ஸாம் மாநிலத்தை காங்கிரஸ் பின் தங்கிய பகுதியாக்கிவிட்டது.
நமது போராட்டம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு எதிரானது அல்ல; வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரானது; ஏழை மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருமானம் மற்றும் முதியவர்களுக்கு மருத்துவ வசதி ஆகிய மூன்றையும் செய்தால் மட்டுமே அஸ்ஸாமின் நிலைமை மாறும் என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications