ராஜாதி ராஜா.. ராஜ கம்பீர... ஜூன் 27ம் தேதி மைசூர் ராஜா கல்யாணம் பண்ணிக்கப் போறார்!
மைசூரு: மைசூரு மன்னர் யதுவீருக்கு வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அரண்மனை வட்டாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைசூரு மன்னராக யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் உள்ளார். இவருக்கும் ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாகுமாரிக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மன்னர் யதுவீரின் திருமணத் தேதியை அரண்மனை வட்டாரம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் 27ம் தேதி மைசூரு மன்னருக்கு திருமணம் நடைபெற உள்ளது. முதலில் மைசூர் அரண்மனை தர்பார் ஹாலில் திருமண வரவேற்பும், அதனைத் தொடர்ந்து திருமணமும் நடைபெற இருக்கிறது.
திருமணத்துக்கான அழைப்பிதழ்களை பிரமோதா தேவி முக்கிய விருந்தினர்களுக்கு அனுப்பி வருகிறார். அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்.
அதோடு, திருமணத்துக்கு வருபவர்கள் ஆண்களாக இருந்தால் வெள்ளை அல்லது கறுப்பு நிற நீள கோட், வெள்ளை பேண்ட், டர்பன் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கோட் சூட் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணத்தையொட்டி மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications