மைசூரில் ஆணவக் கொலை: பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை?... காதலன் புகாரால் பரபரப்பு
பெற்ற மகள் வேறு ஜாதியை சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டதால் ஆத்திரமடைந்த தந்தை அவரை உயிரோடு எரித்து கொலை செய்திருக்கலாம் என்று பெண்ணின் காதலன் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
மைசூர்: கர்நாடகா மாநிலம் மைசூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணை தந்தையே கொலை செய்திருப்பார் என்று காதலன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
மைசூரில் உள்ள ஹெச்.டி. கோட்டே தாலுக்காவை சேர்ந்தவர் குருசித்தேகௌடா. இவரது மகள் ஷோபா (19). இழர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணா (25) என்ற இளைஞர் போலீஸில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதில், நானும், ஷோபாவும் காதலித்து வந்தோம். ஆனால் நான் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலுக்கு ஷோபாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடும் தாக்குதல்
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஷோபாவை மேலூர் கிராமத்தில் சந்தித்து பேசினேன். அப்போது எங்களை அவரது தந்தை குருசித்தேகௌடா பார்த்து விட்டார். பின்னர் அவரும் அவருடன் இருந்த 4 பேரும் சேர்ந்து எங்களை கடுமையாக தாக்கினர்.

கொலை மிரட்டல்
பின்னர் ஷோபாவை கொன்றுவிடுவதாகவு்ம அவரது தந்தை மிரட்டல் விடுத்துக் கொண்டே இழுத்து சென்றார். எனினு்ம ஷோபாவை சந்திக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் ஷோபாவை அவரது கிராமத்தினர் கூட பார்த்து மூன்று மாதங்கள் ஆனதாக தெரிவிக்கின்றனர்.

தீவைத்து எரித்ததாக...
மேலும் மகளை தீவைத்து எரித்து புதைத்து விட்டதாக தந்தை அனைவரிடமும் கூறி வந்துள்ளார். இதனால் வேற்று ஜாதியை சேர்ந்த என்னை ஷோபா காதலித்ததால் அவரது தந்தை அவரை கொன்றிருக்கலாம் என்று வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

இருவரிடம் விசாரணை
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மைசூரு (ஊரகம்) மாவட்ட காவல்க துறை கண்காணிப்பாளர் ரவி சென்னானவர் தெரிவிக்கையில், நாங்கள் வெள்ளிக்கிழமை புகாரை பெற்று கொண்டோம். இந்த வழக்கு தொடர்பாக இருவரை விசாரித்து வருகிறோம்.

தனிப்படைகள் அமைப்பு
விரைவில் என்ன நடந்தது என்பது குறித்து கண்டுபிடித்து விடுவோம். காதலன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்த தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications