மைசூரின் 27வது மன்னரானார் யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ்!
மைசூரு: மைசூரு யதுவம்சத்தின் 27வது மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாருக்கு இன்று முடிசூட்டுவிழா நடைபெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மைசூர் மாகாணத்தின் மன்னராக இருந்தவர் ஸ்ரீஜெயசாமராஜேந்திர உடையார். இவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை தனது மகனாகத் தத்தெடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1974ம் ஆண்டு நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவாக முடிசூடினார். இவர் கடந்த 2013 டிசம்பர் 10ம் தேதி மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.

மன்னர் குடும்ப வழக்கப்படி, பெண் வாரிசுகளின் ஆண்பிள்ளைகளே அடுத்த மன்னராக பதவியேற்பார்கள். அதன்படி, மறைந்த நரசிம்மராஜ உடையாரின் மூத்த சகோதரி மகள் திரிபுரசுந்தராதேவி மகன் யதுவீர கோபாலராஜாவை வாரிசாக தத்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கடந்த பிப்ரவரி 23-ல் யதுவீர கோபாலராஜா, யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் என பெயர் மாற்றப்பட்டு தத்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, யது வம்சத்தின் 27வது மன்னராக யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் முடிசூட்டுவிழா நிகழ்ச்சி மைசூர் அரண்மனை திருமண மண்டபத்தில் இன்று காலை 9.20 மணி முதல் 10.35 மணிக்குள் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மடாதிபதிகள், மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
முடிசூட்டு விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications