நாகலாந்து லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: ஆளும் கட்சியை எதிர்த்து அமோகமாக வெற்றி பெற்ற காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

கோஹிமா: நாகலாந்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸின் ஜமீர், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என்டிபிபி வேட்பாளர் டாக்டர் சம்பென் முர்ரிக்கு எதிராக சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாகலாந்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சுபோங்மேரன் ஜமீர் காலையிலிருந்து முன்னிலை பெற்று வந்து கொண்டிருந்தார். மாநிலம் முழுவதும் உள்ள 11 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. அதில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என்டிபிபி வேட்பாளர் டாக்டர் சம்பென் முர்ரிக்கு எதிராக ஜமீர் சுமார் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Nagaland Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP Congress 2024 2024

NDPP பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மக்கள் ஜனநாயக கூட்டணி ஒருமித்த வேட்பாளராகவும் இருக்கும் முர்ரி தனது சொந்த மாவட்டமான வோகா மற்றும் சில சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்தார்.

2018 மற்றும் 2023 ஆகிய இரு சட்டமன்ற தேர்தலிலும் நாகலாந்து காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அக்கட்சி கடைசியாக 2013ஆம் ஆண்டில் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் 8 எம்எல்ஏக்களும் அப்போது ஆளும் நாகா மக்கள் முன்னணியுடன் (என்பி எஃப்) இல் இணைந்தனர்.

2019 மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ்காரருமான கேஎல்சிஜி 16,344 வாக்கு வித்தியாசத்தில் என்டிபிபியின் டோகேஹோ யெப்தோமியிடம் தோல்வியடைந்தார்.

நாகலாந்தில் கடைசியாக காங்கிரஸ் எம்பி ஒருவர் 1996 ஆம் ஆண்டு மக்களவையில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த முறை யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காங்கிரஸின் சப்போங்மேரன் ஜமீர் வெற்றி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+