மிளகுபொடி வீசிய காங். எம்.பி.க்கும் தீவிரவாதிக்கும் வித்தியாசம் இல்லை: மத்திய அமைச்சர் கடும் தாக்கு

தெலுங்கானா தனி மாநில மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது ஆந்திர எம்.பி.க்கள் சபையின் மையத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தான் கொண்டு வந்திருந்த மிளகு பொடியை எடுத்து ‘ஸ்பிரே' செய்தார்.
இதனால் சபாநாயகர் மற்றும் பல எம்.பி.க்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறினால் அவதிப்பட்டனர். இதையடுத்து ராஜகோபால் உள்பட 18 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ராஜகோபால் தீவிரவாதிக்கு சமமானவர் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சர் தனம் நாகேந்தர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிளகு பொடி வீசிய எல்.ராஜகோபாலுக்கும், தீவிரவாதிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே தாக்குதல் நடத்தினார்கள். இவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே தாக்குதல் நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் பெற்று வெற்றி பெற்ற அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையே அவமானப்படுத்திவிட்டனர். அவர்களின் நடவடிக்கை கோமாளித்தனமானது.
ராஜகோபால் நாட்டுக்கே அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி விட்டார். எனவே அவரையும் சீமாந்திரா பகுதி எம்.பி.ககளையும் நாடாளுமன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications