For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜவஹர்லால் நேருவின் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிடவிருக்கிறார்.

நடிகை நக்மாவுக்கு தற்போது கோலிவுட்டிலும் சரி, பாலிவுட்டிலும் சரி மவுசு இல்லை. ஆனால் போஜ்புரி திரை உலகில் அவர் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரை தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Nagma to contest in Jawaharlal Nehru's constituency

காங்கிரஸ் உறுப்பினரான நக்மா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புல்புர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தெரிகிறது. இந்த தொகுதி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்மாவுக்கு போஜ்புரி ரசிகர்கள் ஏராளமாக இருப்பதால் அவரை போட்டியிட வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. மேலும் அவரை கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

English summary
Congress is planning to make actress Nagma to contest in Phulpur constituency in Uttar Pradesh. This consituency was once represented by former prime minister Jawaharlal Nehru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X