அந்த "251"ஐ மறந்திருங்க.. ரூ. 99க்கு வருது பாருங்க "நமோ டெல்" ஸ்மார்ட்போன்!
டெல்லி: உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இம்மாதம் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நமோடெல் அச்சே தின் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், லாலிபாப் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் (சிஓடி) இந்த ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்யலாம். போனை டெலிவரி செய்வதற்கான கட்டணம் இதில் அடங்காது. வழக்கமான டெலிவரி தொகையை செலுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியர்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
namotel.com இணையதளத்தில் ஸ்மார்ட்போன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட்போனைப் பற்றி விளக்குவதற்காக மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த கருவியின் விலை ரூ.2,999 என்றும் விசேஷ சலுகையில் இதன் விலை ரூ.99 என்றும் இதனினை பயனர்கள் கேஷ் ஆன் டெலிவரி எனப்படும் வீட்டில் கருவியை வாங்கியதும் பணம் அளிக்க முடியும், விநியோகம் செய்ய கட்டணங்கள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஸ்மார்ட் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஃப்ரீடம் 251 என்ற நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருந்தது. நமோடெல் அச்சே தின் நிறுவனம் உலகின் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications