ஆம் ஆத்மியில் இணைகிறாரா இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி?
பெங்களூரு: இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி துறை ஊழியர்களிடையே, ஆம் ஆத்மிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அந்த அடிப்படையில்தான், இன்ஃபோசிஸ் நிறுவன இயக்குநராக பதவி வகித்த பாலகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூருவில் ஆம் ஆத்மி வேட்பாளராக களமிறங்கி கணிசமாக வாக்குகளை வாங்கினார்.

இதனிடையே இன்போஃசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி சமீபத்தில் டெல்லி சென்று, ஆம் ஆத்மியின் முக்கிய புள்ளிகளான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும், மனிஷ் சிசோடியாவையும் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு திரும்பியுள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமஆன சந்திப்பு என்று ஆம்ஆத்மி அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால், நாராயணமூர்த்தியும் ஆம் ஆத்மியில் இணையப்போவதாகவே ஆம் ஆத்மி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. பெங்களூருவை சேர்ந்த அக்ஷய பாத்திரா அமைப்பு, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு அளித்து வருகிறது. இந்த அமைப்புக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நன்கொடை அளித்து வருகின்றன. அதில் நாராயணமூர்த்தி மனைவி, சுதாமூர்த்தி தலைவராக உள்ள அமைப்பு முக்கியமானது.
எனவே, அக்ஷயபாத்திரம் திட்டத்தை டெல்லியிலும் விரிவுபடுத்தவே, நாராயணமூர்த்தி, கேஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சரான மனிஷ் சிசோடியாவை சந்தித்ததாக நாராயணமூர்த்தி தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications