அன்னா முதுகுல குத்திட்டீங்களே கேஜ்ரிவால்.. மோடி தாக்கு
டெல்லி: அன்னா ஹஸேராவின் முதுகில் குத்தி விட்டார் அரவிந்த் கேஜ்ரிவால் என்று கூறியுள்ளார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
டெல்லியில் சீமாபுரியில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சில புதியவர்கள் தேர்தல் களத்தில் புகுந்துள்ளனர். அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஜேபி இயக்கத்திற்குப் பின்னர் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் அன்னா ஹஸாரே. மக்கள் ஊழல்வாதிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் சிலர் அன்னாவின் புனிதமான இயக்கத்தை தங்களது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். அன்னாவின் முதுகில் அவர்கள் குத்தி வருகின்றனர். மேலும் அன்னாவின் இயக்கத்தை தங்களது சுயநலத்துக்காக அவர்கள் பாதியிலேயே முடித்து விட்டனர்.
காங்கிரஸ் மக்களிடம் ஒரு கையைக் காட்டுகிறது. ஆனால் இரு கைகளால் நாட்டை சூறையாடி வருகிறது. ஆனால் புதியவர்களுக்கோ இரு கைகளும் கூட போதாது போலத் தெரிகிறது.
துடைப்பத்தைக் கூட அவர்கள் விட மாட்டார்கள் போல. அதையும் கூட சுருட்டிக் கொள்கிறார்கள் என்றார் மோடி.
துடைப்பம்தான், அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications