தேசியக்கொடியை அவமதிக்கும் மோடி- கிராபிக்ஸில் உருவாக்கி பாஜக தளத்திலேயே வெளியிட்ட “ஹேக்கர்கள்”

Subscribe to Oneindia Tamil

ஜூனாகத்: இணையதள திருடர்கள் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியையும் விட்டுவைக்கவில்லை.

குஜராத்தில் செயல்படும் பாஜக இணையதளத்தை முடக்கி மோடியின் மோசமான புகைப்படங்களை "கிராபிக்ஸ்" மூலம் உருவாக்கி வெளியிட்டு பாஜகவினரை அதிர்ச்சிகடலில் தள்ளி விட்டனர்.

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்ட பாஜக கட்சி சார்பில் தனி வெப்சைட் இயங்கி வருகிறது. "www.bjpjunagadh.org" என்ற அந்த வெப்சைட்டை நேற்று பார்த்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மோடியை காயப்படுத்திய புகைப்படங்கள்:

மோடியை காயப்படுத்திய புகைப்படங்கள்:

காரணம், வெப்சைட்டின் ஏழு பக்கங்களிலும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

தேசிய கொடி அவமதிப்பு:

தேசிய கொடி அவமதிப்பு:

பாஜக தலைவர்கள் தேசிய கொடியை எரிப்பது போலவும், தேசிய கொடி மீது நின்றபடி அவமதிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை இணைத்து பல்வேறு இழிவான வாசகங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

”ஹேக்கிங்” திருடர்கள்:

”ஹேக்கிங்” திருடர்கள்:

இதனை பார்த்த கட்சி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வெப்சைட்டை முடக்கிய மர்ம ஆசாமிகள்தான் இதுபோன்ற செயலிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழிக்கப்பட்ட வெப்சைட்:

அழிக்கப்பட்ட வெப்சைட்:

உடனடியாக அந்த ஏழு பக்கங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனை பற்றி ஜூனாகத் மாவட்ட பாஜக பொறுப்பாளர் ராஜூ ஜூவானி கூறுகையில், "மோடிக்கும், பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மர்ம ஆசாமிகள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசில் புகார்:

போலீசில் புகார்:

கட்சி தலைவர்களின் ஆலோசனைப்படி, இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இனியும் வெப்சைட்டை யாரும் முடக்க முடியாது" என கூறியுள்ளார். தற்போது அந்த தளம் இயல்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+