மனைவி இருப்பதை திடீரென நரேந்திர மோடி ஒப்புக் கொண்டது ஏன்?
அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு போட்டு உண்மையை உலகுக்கு சொல்ல வைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமானதை பகிரங்கமாக இம்முறை ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் தமது திருமணம் குறித்த இடத்தில் எதுவும் குறிப்பிடாமல்தான் தாக்கல் செய்து வந்தார் நரேந்திர மோடி. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, தமக்கு குடும்பம் எதுவும் இல்லை.. நான் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான் பேச்சாக இருக்கும்.

இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் பேசுகையில், என் மனைவியைத் தவிர என்னை யார் பார்த்துக் கொள்ள முடியும். நான் ஏதாவது தவறு செய்தால் என் மனைவிதான் தடுக்க முடியும் என்றும் கூறி வந்தார்.
அத்துடன் ஆம் ஆத்மிதான் மோடிக்கு திருமணமான விவகாரத்தை அம்பலப்படுத்தி வந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் கூட தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற பிரச்சனைகளை தேர்தல் ஆணையம்தான் கையாள வேண்டும் என்று கூறியதுடன் இம்முறை வேட்புமனுவின் அனைத்து பகுதிகளையும் வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும்..இல்லையெனில் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியது.
இதனால்தான் எங்கே உண்மையை மறைத்தால் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துவார்களோ என கருதியே இப்போது திருமணமாகிவிட்டது எனக் கூறியிருக்கிறார் மோடி.
தேர்தல் களத்தில் இன்னும் எத்தனை உண்மைகள் வருமோ?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications