ஸ்ரீசாந்த் கல்யாணத்தில் மோடி... வெறும் வதந்தியாம்!

முன்னதாக நேற்று ஸ்ரீசாந்த்தின் திருமணத்தில் மோடி பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தனை ஏடுகளும் இதை செய்தியாக்கியிருந்தன. ஆனால் உண்மையில் ஸ்ரீசாந்த்துக்கு இன்று திருமணம் நடக்கும் விஷயமே மோடிக்குத் தெரியாது என்று இப்போது செய்திகள் வந்துள்ளன.
கொச்சியில் ஸ்ரீசாந்த்துக்கும், அவரது காதலியான ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண் புவனேஸ்வரி குமாரிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
நகை வடிவமைப்பு டிசைனராக இருக்கிறாரர் புவனேஸ்வரி குமாரி. கடந்த 2006ம் ஆண்டு முதல் இவரும், ஸ்ரீசாந்த்தும் காதலித்து வருகின்றனர். ஸ்ரீசாந்த், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி சிறைக்குச் சென்றபோது அவருக்கு பெரும் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்தார் புவனேஸ்வரி. இதையடுத்து இவர்களது திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
இன்று குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக டிசம்பர் 8ம் தேதியே புவனேஸ்வரி குடும்பத்தினர் கேரளாவுக்கு வந்து சேர்ந்து விட்டனர். நிச்சயதார்த்தமும் நடந்தது. நேற்று சங்கீத் உற்சவம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் எர்ணாகுளம், கோத்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீசாந்த்தின் பூர்வீக வீட்டுக்கு புதுமணத் தம்பதியினர் செல்வார்கள். அதன் பின்னர் மாலையில் கொச்சியில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளார் என்பது
நினைவிருக்கலாம்.
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய 2வது கேரள வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications