ஜெத்மலானி வீட்டில் 'படபட' சந்திப்பு... மோடியுடன் பேசாமல் 'உம்'மென்றிருந்த அத்வானி!
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி.
ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார்.
பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை.

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் மோடியைக் கடுமையாக எதிர்த்து வந்தார் அத்வானி. ஆனால் அத்வானியின் பிடிவாதத்தையும், எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்து விட்டது. இதனால் கோபத்துடன் இருக்கிறார் அத்வானி. இருப்பினும் அமைதி காக்கிறார். எந்தவிதமான புரட்சிகரமான எதிர்ப்பையோ அல்லது அறிவிப்பையோ அவர் இதுவரை வெளியிடவில்லை.
நேற்றைய சந்திப்பின்போது, அத்வானியையும், மோடியையும் அருகருகே உட்கார வைக்க ராம் ஜெத்மலானி முயற்சித்தார். ஆனால் நீங்கள்தான் இன்று நாயகர் நீங்கள் நடுநாயகமாக அமருங்கள் என்று அத்வானி கூறி விட்டு, மோடி அருகே உட்காருவதை தவிர்த்து விட்டார்.
ராம் ஜெத்மலானி ஒரு தீவிர மோடி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கு. மோடியுடனான மோதலில் அத்வானி ஜெயிக்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications