அமைச்சரவையில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு என்ன பதவி கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் பாரதிய ஜனதாவின் நிறுவன தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருவருக்கும் என்ன பதவி கிடைக்கும் என்பதுதான் பாஜகவினரிடையேயான ஹாட் டாபிக்காக இருக்கிறது.

நரேந்திர மோடி மற்றும் அவரது 45 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மிக பிரமாண்ட விழாவில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர். இந்த விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

வயது மூத்த இருவர்

வயது மூத்த இருவர்

மோடி அமைச்சரவையில் வயது மூத்தவர்களாக நஜ்மா ஹெப்துல்லா (74), கல்ராஜ் மிஸ்ரா (73) ஆகியோர் இருவர்தான் இடம்பெற்றுள்ளனர்.

அத்வானி, ஜோஷிக்கு நோ

அத்வானி, ஜோஷிக்கு நோ

75வயதை தாண்டிய அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

சபாநாயகர் பதவி?

சபாநாயகர் பதவி?

அத்வானிக்கு முதலில் சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது. தற்போது எட்டு முறை எம்.பியாகி இருக்கும் சுமித்ரா மகாஜனுக்குதான் சபாநாயகர் வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

வாய்ப்புள்ள பதவிகள்

வாய்ப்புள்ள பதவிகள்

அதே நேரத்தில் முரளி மனோகர் ஜோஷியை சபாநாயகராக்கிவிட்டு அத்வானியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நியமிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+