பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!! ஆப்கன் அதிபருடன் முதல் சந்திப்பு!!
டெல்லி: பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றார்.
நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 9.00 மணியளவில் டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். காரில் வந்திறங்கியதும், அங்கு பிரதமர் அலுவலக அதிகாரிகள் பிரதமர் மோடியை பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். அலுவலகம் உள்ளே சென்ற மோடி அலுவலகத்தில் இருந்த காந்தி படத்திற்கு மலர் தூவி வணங்கி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.
அங்கே தயாராக இருந்த கோப்பை அதிகாரிகள் பிரதமரிடம் கொடுத்தனர் . தொடர்ந்து பிரதமராக முதல் கையொப்பமிட்டு பொறுப்பை மோடி ஏற்று கொண்டார்.
ஆப்கன் அதிபருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் ஹைதராபாத் இல்லம் சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயை மோடி சந்தித்துப் பேசினார்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி சந்தித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஹமீத் கர்சாய் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications