திருமணம் ஆன போது நரேந்திரமோடி 'மைனர் என்பது மிகப் பெரிய பொய்... நடிகை நக்மா தாக்கு
இந்தூர்: திருமணம் ஆன போது நரேந்திரமோடி 'மைனர் இல்லை', மேஜர் தான் எனவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் பிரபல நடிகையும், காங்கிரஸ் வேட்பாளருமான நக்மா.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீரட் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை நக்மா. ஆனபோதும், மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நக்மா. அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து கூறியதாவது:
பெரிய பொய்....
நரேந்திர மோடிக்கு திருமணம் ஆனபோது அவர் மைனர் என்று கூறுவது மிகவும் பெரிய பொய். அவருக்கு எப்போது திருமண்ம் ஆனது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளது. திருமணம் ஆனபோது அவர் மைனர் இல்லை, விவரம் தெரிந்த பெரியவராகிவிட்டார்.
தேர்தல் நேரத்தில்...
மேலும், முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி தனது திருமணம் குறித்தான நிலையை தெரிவிக்காத நிலையில் தேர்தல் நேரத்தில் அது குறித்து பேசுவது ஒன்றும் தவறு இல்லை. அதேபோல், மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தான் குஜராத் மாடலா...?
சமீபத்தில் மாதாசா மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் 14 இளைஞர்களால் தீ வைக்கப்பட்டது சுட்டிக்காட்டி, இது போன்ற மாடல் மோடியின் திட்டம் நாடு முழுவதும் பிரதிபலிக்குமா? இவ்வாறு நக்மா கேள்வி எழுப்பினார்.
என்ன செய்தார் இராணி...
மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிடும் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இராணியை மிகவும் முக்கியமான தொகுதியில் நிறுத்தும் அளவுக்கு நாட்டிற்காக எதனை செய்துள்ளார் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் நக்மா கேள்வி எழுப்பினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications