விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாயாவதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி சென்ற விமானம் தரையிறங்குகையில் முன்பக்க சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

Narrow escape for Mayawati's plane

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் உத்தர பிரதேச முதல்வருமான மாயாவதி தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவர் பிரச்சாரம் செய்துவிட்டு தனது உதவியாளர் மிஸ்ராவுடன் லக்னோ திரும்பினார்.

விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது முன்பக்க சக்கரம் செயல் இழந்துவிட்டது. விமானியும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து ஒரு வழியாக விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார். இதற்கிடையே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விமான ஓடுதளத்திற்கு விரைந்து வந்தனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நல்லவேளையாக மாயாவதி காயங்கள் எதுவும் இன்றி தப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+