எதிர்காலமே இதை வைத்துதான்.. சந்திரயான் 2வை மிக தீவிரமாக கண்காணிக்கும் நாசா.. இதுதான் காரணம்!

இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தை தொடக்கத்தில் இருந்து இன்று வரை நாசா மிக கவனமாக பின் தொடர்ந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Watch Video : Chandrayaan-2 landing in moon.

    டெல்லி: இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தை தொடக்கத்தில் இருந்து இன்று வரை நாசா மிக கவனமாக பின் தொடர்ந்து வருகிறது. சந்திரயான் 2ன் ஒவ்வொரு படி நிலையையும் நுணுக்கமாக கவனித்து வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி சந்திரயான் 2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதன்பின் மிக நீண்ட பயணத்தை விண்வெளியில் முடித்துவிட்டு நாளை அதிகாலை நிலாவில் சந்திரயான் 2 தரையிறங்குகிறது.

    சந்திரயான் 2 நாளை அதிகாலை நிலவில் தரையிறங்குகிறது. நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கும்.

    மிக கவனம்

    மிக கவனம்

    இந்த நிலையில் இஸ்ரோவின் இந்த சந்திரயான் 2 திட்டத்தை நாசா மிக கவனமாக பார்த்து வருகிறது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்தே இதை மிக மிக கவனமாக நாசா பார்த்து வருகிறது. இன்று இரவு சந்திரயான் 2 நிலாவில் இறங்கும் என்பதால் நாசா அதிக கவனத்துடன் இந்த நிகழ்வை கவனிக்கிறது.

    நாசா எப்படி

    நாசா எப்படி

    ரஷ்யா, சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து சந்திரயான் 2 தான் நிலவில் ஆராய்ச்சி செய்ய போகிறது. நிலவிற்கு ரோவர் அனுப்பும் நான்காவது நாடு நாம்தான். இதனால் சந்திரயான் 2 அதிக கவனம் பெறுகிறது. அதே சமயம் சந்திரயான் 2 வேறு இரண்டு முக்கியமான விஷயங்களுக்காகவும் கவனம் பெறுகிறது.

    முக்கியம்

    முக்கியம்

    சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்திற்கு செல்கிறது. நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி செய்தது கிடையாது. அதனால் சந்திரயான் 2வின் ஆராய்ச்சியை நாசா அதிகமாக உற்றுநோக்குகிறது. சந்திரயான் 2 என்ன கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தண்ணீர் எப்படி

    தண்ணீர் எப்படி

    அதேபோல் மூன்று முக்கிய நாடுகள் பல வருடமாக நிலவை ஆராய்ச்சி செய்தும் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சந்திரயான் 1தான் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அதன்பின்தான் அமெரிக்காவும் அதை உறுதி செய்தது.

    என்ன எதிர்காலம்

    என்ன எதிர்காலம்

    அதனால் சந்திரயான் 2 என்ன மாதிரி கண்டுபிடிப்பை நிகழ்த்த போகிறது என்று நாசா எதிர்பார்த்துள்ளது. சந்திரயான் 2வின் தென் துருவ கண்டுபிடிப்பை பொறுத்துதான் நாசா இனி அங்கு ஆராய்ச்சி செய்யும். நிலவில் செய்யப்படும் ஆராய்ச்சிகளின் எதிர்காலமே இதை வைத்துதான் இருக்கிறது என்கிறார்கள். அதேபோல் ரஷ்யாவும் சந்திரயான் 2வின் இந்த ஆராய்ச்சிக்காக மிக கவனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+