For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்த சவுதி அரேபிய மன்னருக்கு மரியாதை: இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா மரணம் அடைந்ததையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மரணம் அடைந்தையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் சனிக்கிழமையன்று

National mourning’ for dead Saudi King

( ஜனவரி 24) இந்தியா முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். எந்த அரசு அலுவலகங்களிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி எதுவும் இருக்காது. அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், யூனியன் பிரேதச நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு செயலர்களிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் காலமான சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்துல்லாவின் மறைவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.

English summary
Hours after Prime Minister Narendra Modi said he was "saddened" by the passing away of King Abdullah of Saudi Arabia who has left a lasting impact on his country, the BJP-led NDA government on Friday night declared "national mourning" on Saturday as a mark of respect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X