Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பம்.. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை கைவிடும் மத்திய அரசு? பின்னணியில் 3 "முக்கிய" காரணம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை எப்படியும் அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் தீவிரமாக இருந்தார். வெளிப்படையாக அவ்வாறான கருத்துக்களை கூறியிருந்தார். ஆனால், இதெல்லாம் கொரோனா காலத்திற்கு முன்பு.

இப்போது சிஏஏ என்று அழைக்கப்படக் கூடிய, குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறுகிறாரே தவிர, தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் கூட பதில் தராமல் தவிர்க்கிறார்.

இந்துக்களுக்கு அடைக்கலம்

இந்துக்களுக்கு அடைக்கலம்

அமித் ஷாவின் இந்த போக்கிற்கு பின்னணி என்ன என்பதை பார்க்கும் முன்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் சிஏஏ இடையேயான வித்தியாசத்தை பார்த்துவிடலாம். இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிய பயன்படுவது தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை. சிஏஏ என்பது வேறு. இந்தியாவில் குடியேற விரும்பும், இந்தியாவின் 6 அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சட்டப்படியான குடியுரிமை வழங்குவது சிஏஏ. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இந்துக்கள் கொடுமைக்குள்ளாகுவதாகவும், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க, சிஏஏ உதவும் என்பதும் பாஜக ஆதரவாளர்கள் வாதமாக இருந்தது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு

சிறுபான்மையினருக்கு பாதிப்பு

ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் சிஏஏ இரண்டையும் இணைத்து ஒரே நேரத்தில் செயல்படுத்தும்போது சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்தது. ஏனெனில் பிற நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே சிஏஏ மூலம் அடைக்கலம் தரப்படும், முஸ்லீம்கள் என்றால் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின்படி வெளியேற்றப்படுவார்கள் என்பதே சிறுபான்மையினர் பயமாக இருந்தது.

3 விஷயங்கள்

3 விஷயங்கள்

ஓகே.. இப்போ விஷயத்திற்கு வருவோம். இப்போது ஏன், சிஏஏ ஓகே, தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது? இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, அசாமில் சூடுபட்டதால் ஏற்பட்ட ஞானோதயம். இதை ஓபனாக பாஜக தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அசாமில் மோசமான அனுபவம்

அசாமில் மோசமான அனுபவம்

தேசிய குடிமக்கள் பதிவு (NRC) என்ற பெயரில் அசாமில் இப்படித்தான், சட்ட விரோத குடியேறிகளை கண்டுபிடிப்பதாக கூறி கணக்கெடுப்பு நடந்தது. ஆனால், லட்சக் கணக்கான பூர்வகுடிமக்கள் மற்றும் இந்துக்களின் பெயர்கள் இறுதி பட்டியலில் விடுபட்டது. இதனால் இந்துக்களும் பாஜக மீது அதிருப்தியடைந்தனர். சுப்ரீம்கோர்ட் வரை வழக்கு போயுள்ளது. தொழில்நுட்ப கோளாறு இப்படியான இடையூறுக்கு காரணமாகிவிடுகிறது என்கிறார்கள்.

ஓட்டு வங்கி போய்விடும்

ஓட்டு வங்கி போய்விடும்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயலும் இந்த நேரத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தி, இந்துக்கள் அந்த பட்டியலில் வராவிட்டால், இருக்கும் ஓட்டு வங்கிக்கும் வேட்டு வைத்ததை போல ஆகிவிடும். மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், இதுபற்றி கூறுகையில், அசாமில் இந்துக்கள் பெயர் என்.ஆர்.சி.யிலிருந்து வெளியேறிவிட்டது. அதேபோன்ற நிலை மேற்கு வங்கத்திற்கு வரக்கூடாது என்றார். மேலும், சிஏஏவை அமல்படுத்தினாலே, சட்ட விரோத குடியேறிகள் யார் என்பது தெரிந்துவிடும். எனவே, தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கதேச உறவு

வங்கதேச உறவு

இது முதல் காரணம். 2வது காரணம் என்ன தெரியுமா? வங்கதேசத்துடனான உறவு. மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியேறி நீண்டகாலமாக வசிப்பவர்களில், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்தான் கணிசம். இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை கொண்டு வந்தால், அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இதனால் அந்த நாட்டு அரசு கோபமடையும். சீனாவுடன் எல்லையில் பிரச்சினை இருக்கும் நிலையில், இந்த பக்கத்து எல்லை நாடான வங்கதேசத்தை பகைத்துக்கொள்வது ஆபத்து என்பது 2வது காரணம்.

மமதா பானர்ஜி பிரச்சாரம்

மமதா பானர்ஜி பிரச்சாரம்

மேற்கு வங்கத்தில், இன்னும் நாலைந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை மமதா பானர்ஜி தேர்தல் பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான நிலையில், அதில் கை வைக்க பாஜக பயப்படுகிறது. இது தேர்தல் மற்றும் வங்கதேச விவகாரத்தோடு மட்டும் சம்மந்தப்பட்டிருந்தால், இன்னும் சில மாதங்களில் கூட மீண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் 3வது ஒரு காரணம் இருக்கிறது. அதையும் வைத்து பார்த்தால், மத்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை முழுமையாக கைவிடப்போவது உறுதி என்பது ஊர்ஜிதமாகிறது.

அமெரிக்க ஆட்சி மாற்றம்

அமெரிக்க ஆட்சி மாற்றம்

அது என்ன என்கிறீர்களா? அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம்தான் அது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது இந்தியாவில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஜோ பிடன் தலைமையிலான ஜனநாயக கட்சி ஆட்சி, அமெரிக்காவில் மலர்ந்துள்ளது. டிரம்ப் வலதுசாரி கொள்கை கொண்டவர். சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாக அச்சப்படும் விஷயத்தை யார் செய்தாலும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார். ஆனால் ஜோ பிடன் நிர்வாகம் அப்படியிருக்காது.

ஜோ பிடன் கொள்கை

ஜோ பிடன் கொள்கை

அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக, ஜோ பிடன் வழங்கிய கொள்கை ஆவணத்தில், சிஏஏ, என்ஆர்சி போன்ற நடைமுறைகள் மிக நீண்ட மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட பல மதங்கள், பன்மைத்துவம் கொண்ட ஒரு ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பொருத்தமற்றதாக உள்ளது என கூறியிருந்தார்.
காஷ்மீரில் அனைத்து மக்களுக்கான உரிமை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அசாமில் கையில் எடுக்கப்பட்ட என்ஆர்சிக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார். இப்போது ஜோ பிடன் அமெரிக்க அதிபராக முடிசூட உள்ளதால், இந்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அல்லது அமெரிக்காவுடனான இந்திய உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வு இதற்கு காரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+