காதலிக்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம்... மே.வங்கத்தில் தேசிய வாலிபால் வீராங்கனை குத்திக் கொலை !
கொல்கத்தா: காதலிக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் மேற்கு வங்கத்தில் 15 வயது தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் பர்கான மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா எய்ச் என்ற டீனா. இவர் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வாலிபால் வீராங்கனையாக இருந்து வந்தார். 9 ம் வகுப்பு படிக்கும் இவர் சிறு வயது முதல் கைப்பந்து விளையாட்டில் ஏற்பட்ட ஈடுபாட்டில் மிக துடிப்பான வீராங்கனையாக திகழ்ந்தார்.

ஏராளமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை குவித்திருக்கிறார். அதன் மூலம் தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் விளையாடும் தகுதியையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அங்குள்ள பயிற்சி முகாமில் வெள்ளிக்கிழமையன்று சக வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் சங்கீதா.
அப்போது அங்கு வந்த சக கைப்பந்து ராஜா என்பவர் சங்கீதாவை சந்தித்து தனது காதலை தெரிவித்துள்ளார். அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற சுரதா சிங் ஆத்திரத்தில் சங்கீதாவை கத்தியால் இடைவிடாது குத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தில் கைப்பந்து வீராங்கனை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் இன்று ராஜா சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் சங்கீதாவை காதலித்ததாகவும். சங்கீதா அதை ஏற்க மறுத்ததாகவும் கூறி உள்ளார். சங்கீதாவின் நடவடிக்கையால் ஆத்திரமைடைந்து அவரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் விளையாட்டுத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications