"நாட்டி பாய்" இன்று நல்ல பையனா நடந்துக்கிட்டான்.. கமெண்ட் அடித்த INSAT 3DS இயக்குநர்! ஒரே சிரிப்பு!
ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி 14 ராக்கெட் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய நிலையில் "நாட்டி பாய்" நல்ல பணிவான ஒழுக்கமான பையனாக நடந்து கொண்டுள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இன்சாட் 3டிஎஸ்: இந்த ராக்கெட் இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டது.
2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்த ஜி.எஸ்.எல்.வி 14 சரியான திசையில் பயணித்து செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த செயற்கை கோள் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
நாட்டி பாய்.. நல்ல பையனாக நடந்து கொண்டுள்ளான்: அதைத்தொடர்ந்து பேசிய இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப், "கிரையோஜெனிக் என்ஜினோடு இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ஜி எஸ் எல் வி ராக்கெட் ஒரு காலத்தில் நாட்டி பாய் என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று "நாட்டி பாய்" நல்ல பணிவான ஒழுக்கமான பையனாக நடந்து கொண்டுள்ளது.
செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஜி எஸ் எல் வி திட்டத்தின் 16வது மிஷன். கடந்த முறையை விட இந்த 50 கிலோ அதிகமான பே லோட் உடன் இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.
நாட்டி பாய் - செல்லப் பெயர்: ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டி பாய் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த ராக்கெட் கடந்த காலங்களில் இதுவரை நிறைய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் 40 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது ஜி.எஸ்.எல்.வியின் ஃபெயிலியர் ரேட் 40 சதவீதம்.
இன்சாட் 3டிஎஸ் -க்கு முன்னதாக ஏற்கெனவே 15 முறை விண்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் 6 மிஷன்களின் போது இந்த ராக்கெட் பிரச்சனைகளை சந்தித்தது. கடந்த ஆண்டு மே மாதம் கடைசியாக இந்த ராக்கெட் விண்வெளி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது அது வெற்றியடைந்தாலும் அதன் பிறகு விண்ணுக்கு சென்ற போது தோல்வியில் முடிந்தது.
இப்படியாக ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் பலமுறை சொதப்பி, என்ன நடக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதால் இதனை நாட்டி பாய் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இந்த நாட்டி பாய் இன்று நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார் இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications