பாஜகவுடன் கை கோர்த்து பிஜேடியை விகே பாண்டியன் உடைக்கப் போகிறாரா? நவீன் பட்நாயக் செம்ம கோபம்!
புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து ஒடிஷாவின் எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளத்தை முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் வலதுகரமான விகே பாண்டியன் உடைக்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த ஊடகத் தகவல்கள் அனைத்தும் விஷமத்தனமானது; திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது என கொந்தளித்துள்ளார் மாஜி முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிஷாவில் அசைக்க முடியாத ஆளுமையாக நவீன் பட்நாயக் இருந்து வந்தார். ஒடிஷாவில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளத்தை பாஜகவால் வீழ்த்த முடியுமா? என்ற கேள்வியும் இருந்தது.

ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. ஒடிஷா தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தவர் பெயர் விகே பாண்டியன். தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரி. ஒடிஷா அரசில் பணியாற்றிய நிலையில் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் வலதுகரமானார். பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியிலும் இணைந்தார். ஒரு கட்டத்தில் நவீன் பட்நாயக்குக்குப் பின் அரசியல் வாரிசு விகே பாண்டியன்தான்; அவர்தான் ஒடிஷாவின் அடுத்த முதல்வர் எனவும் பேசப்பட்டது.
இதனையே நவீன் பட்நாயக்கையும் பிஜூ ஜனதா தளத்தையும் வீழ்த்தும் ஆயுதமாக்கியது பாஜக. ஒடிஷா மக்களை தமிழர் ஒருவர் ஆள அனுமதிக்கலாமா? என்பது தொடங்கி விகே பாண்டியனுக்கு எதிராக முழு வீச்சில் பிரசாரம் செய்தது பாஜக. இதற்கு பலனும் கிடைத்தது. ஒடிஷாவில் நவீன் பட்நாயக் முதல்வர் பதவியையும் ஆட்சியையும் இழந்தார்.
ஒடிஷாவில் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் விகே பாண்டியன். இந்த நிலையில்தான் பாஜகவுடன் இணைந்து பிஜூ ஜனதா தளத்தை உடைக்க விகே பாண்டியன் முயற்சிக்கிறார்; இதற்காக டெல்லிக்கு பல முறை சென்று வந்தார் என ஊடக செய்திகள் பரபரப்பை கிளப்பிவிட்டன.
ஆனால் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கோ, இப்போதும் விகே பாண்டியன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். விகே பாண்டியன், பாஜகவுடன் இணைவதாக வெளியான செய்திகள் விஷமத்தனமானது; திட்டமிட்ட பொய்ச் செய்திகள் என கொந்தளித்துள்ளார் நவீன் பட்நாயக்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications