சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்
சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதையறிந்து கொண்ட மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications