காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது தேசியவாத காங்கிரஸ்!
Subscribe to Oneindia Tamil
நாசிக்: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சுனில் தத்கரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுனில் தத்கரே, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்புக் குழுவை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டிருக்கிறோம். தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து தேர்தல் விவகாரங்களும் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.
இதேபோல் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறோம். மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 144 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்றார்.












Click it and Unblock the Notifications