இளம்பெண் பாலியல் பலாத்காரம்: அமைச்சரின் சகோதரர் கைது
Subscribe to Oneindia Tamil
சதாரா: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாராஷ்ட்ரா மாநில அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் சஷிகாந்த் ஷிண்டே. இவரது சகோதரர் ருஷிகாந்த் ஷிண்டே. இவர் வதே பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 33 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண், அமைச்சரின் தம்பி மீது போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ருஷிகாந்தை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 21 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறும்போது, ''இந்த வழக்கை நடுநிலையாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications