பாஜக, நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டி.. பீகார் தேர்தலுக்கு இறுதியான தொகுதி பங்கீடு
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வந்தது. இந்த இழுபறி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியு என இரு கட்சிகளுமே தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியில் மற்ற கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பீகாரில் இப்போது நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஜேடியு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. என்டிஏ கூட்டணிக்கு எதிராக அங்குக் காங்கிரஸ்- ஆர்ஜேடி மகாபந்தன் கூட்டணி இருக்கிறது. பீகாரில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது..

தொகுதி பங்கீடு
அதேநேரம் கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியாகாமல் இருந்தது. என்டிஏ மற்றும் மகாபந்தன் என இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருந்தது. இது தொடர்பாக பாஜக- ஜேடியு மற்றும் ஆர்ஜேடி என இரு தரப்புமே கூட்டணிக் கட்சிகளுடன் தொடர் ஆலோசனையை நடத்தி வந்தன. இந்தச் சூழலில் தான் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
சம அளவு இடங்கள்
இந்தக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ள நிலையில், எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 202 தொகுதிகளில் பாஜகவும் ஜேடியு கட்சிகளும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 41 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவும் ஜேடியு கட்சியும் சம அளவு தொகுதிகளில், அதாவது தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 தொகுதிகளில் போட்டியிடும். இது தவிர, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) ஆகிய இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான தகவலை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தர்மேந்திரா பிரதேன் அறிவித்தார்.
கடந்த தேர்தல்
கடந்த 2020ஆம் ஆண்டில், ஜேடியு 115 தொகுதிகளிலும், பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது பஸ்வான் தனித்துப் போட்டியிட்டார். சிராக் பாஸ்வான் அப்போது மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார். இருப்பினும், மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டார். பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டார்.
சிராக் பாஸ்வான் அந்தத் தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் வெல்லவில்லை என்ற போதிலும், பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றார். நிதிஷ் குமார் கட்சி பல தொகுதிகளில் தோற்க அவர் பிரதான காரணமாக இருந்தார். இப்போது அவர் என்டிஏ கூட்டணியிலே போட்டியிடும் நிலையில், அந்த வாக்குகள் மொத்தமாக என்டிஏ கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி
மறுபுறம் மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. காங்கிரஸ் கூடுதல் இடங்களைக் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே ஆர்ஜேடி தலைவர்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர்களைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதியாகும் எனத் தெரிகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications