பீகார்: பா.ஜ.க. அணிக்கு 126 இடங்கள் கிடைக்கும்; முதல்வராக நிதிஷுக்கு ஆதரவு- இந்தியா டுடே கணிப்பு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டனி 126 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடேவின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் முதல்வராக நீடிக்க 29% பேர் ஆதரவு அளித்துள்ளதாகவும் அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, மத்திய அமைச்சர் உபேந்திர குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் இன்னமும் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரவில்லை.
அதேபோல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதையும் பா.ஜ.க. அணி அறிவிக்கவில்லை.
முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. எஞ்சியவற்றில் 40-ல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா டுடே கருத்து கணிப்பு
இந்த நிலையில் இந்தியா டுடே (India Today Group- Cicero) குழுமம், பீகாரில் தேர்தலுக்கு முந்தைய நிலைமை தொடர்பாக கருத்து கணிப்பை ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் விவரம்:
இந்த கருத்து கணிப்பு 81 தொகுதிகளில் 5,968 பேரிடம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.

பாஜக- 125; ஐ.ஜ.த- 106
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களை பா.ஜ.க. அணி வெல்லும். நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைக்கும். பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு தேவை 122 இடங்கள்.

நிதிஷுக்கு ஆதரவு
முதல்வர் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமாருக்குத்தான் அதிக அளவாக 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் முதல்வர் வேப்டாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதும் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடிக்கு 19%; லாலு பிரசாத் யாதவுக்கு 12%, ராம்விலாஸ் பாஸ்வானுக்கு 7% மாஞ்சிக்கு 6% பேர் ராப்ரிதேவிக்கு 2% பேர் ஆதரவளித்துள்ளனர்.

ஊழல்தான்..
பீகார் தேர்தலில் முதன்மை பிரச்சனையாக ஊழல்தான் என 22%; அரிசி விலைஉயர்வுதான் என 17% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேல்ஜாதி ஓட்டு பா.ஜ.க.வுக்கு
ஜாதிய அடிப்படையில் பிராமணர்கள், ராஜ்புத்திரர் அல்லது தாகூர்கள் 70% பேர்; பூமிகார்களில் 77% பேர் பா.ஜ.க. ஊட்டணியை ஆதரிக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் வாக்கு..
யாதவர்கள், ஆகிர்கள், குர்மிகள் மற்றும் கோரிகள் என பிற்படுத்தப்பட்டோர் நிதிஷ்- லாலு- காங்கிரஸ் அணிக்கு பெரும்பான்மை ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியை உடைத்துக் கொண்டு லாலுவுடன் நிதிஷ்குமார் கை கோர்த்ததால் அவருக்கு லாபமில்லை என 47%; நிச்சயம் லாபம் என 43% பேர் கூறியுள்ளனர்.

2010-ல் நிலைமை என்ன?
கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. லாலு-பாஸ்வான் கூட்டணி வெறும் 25 இடங்களைத்தான் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications