நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு- உள்துறை அமைச்சகம் ஏற்பு!
நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் இன்று தாக்கல் செய்தது.
டெல்லி: நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் ஏற்றது.
கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு போராடி வந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் சட்ட வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கெனவே சமர்ப்பித்தது.
எனினும் அந்த வரைவு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்க அளிக்க சட்ட வரைவு கொண்டு வந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு இயற்றியது
இதைத் தொடர்ந்து அவசர சட்ட வரைவை மத்திய உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த மித்ரா, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அரசு கோரிய ஆவணங்களை ராதாகிருஷ்ணன் தயார் செய்து அதை பிற்பகலில் மத்திய உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் மீண்டும் சமர்ப்பித்தார்.

சட்ட வரைவு ஏற்பு
இதை அந்த துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தது. மேலும் இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திலிருந்து சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாடு, சட்டத் துறை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு...
அந்த 3 அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்தவுடன் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.

ஆளுநர்
தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுடன் மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க்கும் அவசர சட்டம் முறையாக பிறப்பிக்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications