நேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும் போடும் 'குண்டு'
மீரட்: நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த நேருதான நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சோவியத் ரஷ்யாவில் கொல்லப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை தகவலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க்குற்றவாளியாக தேடப்பட்டார். அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி.

சோவியத் ரஷ்யாவில்,...
இதனால் சோவியத் ரஷ்யா தமக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றும் நேதாஜி முழுமையாக நம்பினார். இதனால் அவர் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த மன்சூரியா என்ற இடத்துக்கு சென்றடைந்தார்.

சிறைபிடிப்பு
அதன் பின்னர் அப்போதைய ரஷ்யா அதிபர் ஸ்டாலினை நேதாஜி சந்தித்த போது கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.

நேருவுக்கு ஸ்டாலின் கடிதம்
இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேருவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தம்முடைய கஸ்டடியில்தான் நேதாஜி இருப்பதாகவும் அவரை என்ன செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

பிரிட்டிஷ் பிரதமருக்கு தகவல் கொடுத்த நேரு
உடனடியாக 1945ஆம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நேரு தம்முடைய ஸ்டெனோகிராபர் சியாம் லால் ஜெயின் என்பவரை அழைத்து இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். இந்த உண்மைகளை 1970ஆம் ஆண்டு நேதாஜி மரணம் தொடர்பாக விசாரித்த கோசலா கமிஷன் முன்பு ஜெயின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நேதாஜி கொலை
அதாவது ஜெயின் கூறியபடி, சோவியத் ரஷ்யாவில் நேதாஜி சிறையில் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு நேரு தெரியப்படுத்தியிருக்கிறார். அதன் பின்னர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் நேதாஜியை கொல்ல உத்தரவிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

நேதாஜி குடும்பத்தினர் மறுப்பு
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்தை நேதாஜியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போஸ் கூறுகையில், நேதாஜி சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21-ல் அமைத்த ஆசாத் ஹிந்த் அரசை அங்கீகரித்த 11 நாடுகளில் சோவியத் யூனியனும் ஒன்று. அப்படியிருக்கும் போது சோவியத் யூனியனால் நேதாஜி கொல்லப்பட்டிருப்பார் என்பது சரியானது அல்ல..

ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துக
2005ஆம் ஆண்டு நீதிபதி முகர்ஜி கமிஷனோ தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று கூறியது. நேதாஜி மாயம் தொடர்பான கோப்புகளை முதலில் பகிரங்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications