எனக்கு யாரும் முத்தம் கொடுக்கவும் இல்லை, நானும் யாரையும் அறையவும் இல்லை: நக்மா
டெல்லி: தனக்கு யாரும் முத்தம் கொடுக்கவில்லை என்றும், தான் யாரையும் அறையவும் இல்லை என்றும் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நக்மாவுக்கு பிரச்சனையே பிரச்சாரத்திற்கு செல்வது தான்.

முத்தம்
மீரட் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றார் நக்மா. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சிங் நக்மாவின் முகத்தை இழுத்து வலுக்கட்டாயமாக கன்னத்தில் முத்தமிட்டார் என்று செய்திகள் வெளியாகின. மேலும் அந்த வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அறை
முத்த சம்பவத்தை அடுத்து மீண்டும் பிரச்சாரத்திற்கு கிளம்பினார் நக்மா. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நக்மாவை தொட்டுப்பார்க்க அசைப்பட்டபோது அவரது கன்னத்தில் அறைந்தார் நக்மா.

பாதுகாப்பு
பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் நக்மாவை காண கூட்டம் கூடிவிடுவதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

நக்மா
தனக்கு யாரும் முத்தம் கொடுக்கவும் இல்லை, தான் யாரையும் அறையவும் இல்லை என்று நக்மா பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications