For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலத்த சர்ச்சை எதிரொலி... ”மேகி நூடுல்ஸ்”ஸை திரும்பப் பெறுகிறது நெஸ்லே!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள உணவுப் பொருளான மேகி நூடுல்ஸினை திரும்பப் பெற்றுக் கொள்ள நெஸ்ட்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயன பொருட்கள் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழகம், டெல்லி, குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விற்க தடை விதிக்கப்பட்டது.

maggi noodles

மேலும் விற்பனையில் உள்ள பொருட்களையும் திரும்ப பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மேகி நூடுல்சை திரும்ப பெற்றுக்கொள்ள நெஸ்ட்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, "பாதுகாப்பு காரணங்களுக்காக மேகி நூடுல்சை திரும்ப பெற்றுக்கொள்கிறோம். விரைவில் சந்தைகளில் இருந்து திரும்ப பெற்று கொள்ளப்படும். நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் உற்பத்தி பொருட்களின் தரமுமே எங்களது முக்கியம்" என நெஸ்ட்லே நிறுவனம் கூறியுள்ளது.

English summary
Nestle India on Thursday night decided to take Maggi off the shelves after a controversy erupted over its contents, prompting several states to ban the two-minute noodles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X