நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ கேப்டன் அப்பாஸ் அலி மரணம்
லக்னோ: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் அப்பாஸ் அலி தனது 94வது வயதில் அலிகரில் காலமானார்.
சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் கேப்டன் அப்பாஸ் அலி. உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் வசித்து வந்த அவர் இன்று தனது 94வது வயதில் காலமானார்.

கேப்டன் அப்பாஸ் பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவ வீரராக பணியாற்றியவர். பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது.
பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேச நலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு 1977ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications