இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்றேனா?: சானியா அந்தர் பல்டி
டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்று நான் கூறவே இல்லை என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் தெற்காசிய பகுதிக்கான பெண்கள் குட்வில் அம்பாசிடராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சானியா பேசுகையில்,

இந்தியாவில் சானியா மிர்சாவாக இருப்பது கடினம். இங்கு ஆண்களும், பெண்களும் சரிசமம் என்று பார்ப்பது இல்லை. ஒரு பெண் என்பதால் நான் பல சர்ச்சைகளில் சிக்கினேன். இந்தியாவில் பெண்களுக்கு மரியாதை கிடையாது. பெண்களை விலங்குகளை போன்று நடத்துகிறார்கள் என்று தனது மனதில் உள்ள ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதை பார்த்த பலரும் சானியாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவில் பெண்களுக்கு மரியாதையே இல்லை என்று நான் கூறவில்லை. இந்த பகுதிக்கான அம்பாசிடர் நான். நாடு தனது அன்பை காட்டவில்லை என்றால் என்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. நான் கொடுத்து வைத்தவள், மிகவும் கொடுத்து வைத்தவள்.
ஆனால் உலகின் இந்த பகுதியில் பல பெண்கள் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெண் என்பதால் அவர்களின் கனவை நினைவாக்க முடியாவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications