"எனக்கு நாய்கள்தான் முக்கியம்;நீ வேண்டாம்” - செல்லங்களுக்காக கட்டிய கணவரை பிரிந்த மனைவி!
பெங்களூரு: பெங்களூருவில் தான் வளர்த்து வந்த செல்ல நாய்களுக்காக பெண் ஒருவர் கட்டிய கணவரை உதறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் லே அவுட்டை சேர்ந்தவர் அக்கணவர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பொறியாளரான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தால் இருவீட்டாரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.

சீர்வரிசையாக வந்த நாய்கள்:
திருமணம் முடிந்த கையோடு அப்பெண் தன் பிறந்த வீட்டு சீர்வரிசைகளுடன் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடன் இரண்டு லேப்ரடர் இனநாய்களும் வந்தன. இந்த நாய்களை பார்த்ததும் இது மணமகன் குடும்பத்தாருக்கு கொஞ்சம் நறுக்கென்று இருந்தது.ஆனாலும், பொறுத்துக் கொண்டனர்.

படுத்த ஆரம்பித்த செல்லப் பிராணிகள்:
ஆனால் நாட்கள் வாரங்கள் ஆகி வாரங்கள் மாதங்கள் ஆனபோதும் நாய்கள் தங்கி இருந்தன. இருந்தாலும் புதுமண தம்பதிகளிடம் இதனால் ஒரு பிரச்சினை ஏற்பட வேண்டாம் என்று பையன் குடும்பத்தினர் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் உறுப்பினர்களாக மாறத் தொடங்கிவிட்டன.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்:
அதன் பிறகுதான் பெண்ணின் அந்த செல்ல நாய்களும் அவருடன் வாழ வந்து இருக்கின்றன என்பது பையனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இது குடும்பத்தாரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெளில போய் படுங்க:
ஒரு கட்டத்தில் நாய்களும் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிறதே என்று மிகவும் வெறுப்படைந்த கணவன், மனைவியிடம் ‘‘நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். நாய் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா''? என்று கேட்டுள்ளார். அதற்கு ‘‘என் செல்ல நாய்கள் என்னுடன் தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் வெளியே சென்று தூங்குங்க'' என்று சாதாரணமாக கூறி அதிர்ச்சி அளித்து உள்ளார்.

நாய்கள்தான் எனக்கு முக்கியம்:
இதனால் நிலைமை விபரீதமாக செல்வதை உணர்ந்த கணவர் குடும்பத்தினர் இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன்பேரில் போலீசார் அப்பெண்ணை அழைத்து விசாரித்து உள்ளனர். அதற்கு அவர் தெளிவாக, ‘‘இந்த நாய்கள் தான் எனக்கு முக்கியம். நாய்களை நான் திருப்பி அனுப்ப முடியாது'' என்று கூறியுள்ளார்.

பிடிவாதமான பெண்:
அப்பெண்ணுக்கு இரண்டு மூன்று முறை மனோதத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும் நாய்களை திரும்பவும் தனது தாய் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று அஞ்சலி பிடிவாதமாக கூறிவிட்டார். கணவரை பிரிந்தாலும் பிரிவேனே தவிர நாய்களை பிரியமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications