புதிய அணை கட்டுவதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரே தீர்வு: உம்மன் சாண்டி பிடிவாதம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவது மட்டும்தான் ஒரே தீர்வு என கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டி உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் கேரள அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சரை கூட்டத்திற்கு பின்னர் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் நீர் மட்டம் உயரும் நிலை உள்ளதால், உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை இந்த நடவடிக்கையை கேரள அரசு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை இடுக்கி மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
அணையின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரே தீர்வு. கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டியே தீருவோம். இன்று அல்லது நாளை அது நடந்தே தீரும். 999 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அணையின் பாதுகாப்பு குறித்து யாரேனும் உறுதியாக கூறமுடியுமா? எனவே புதிய அணை கட்டுவதே இந்த பிரச்சினைக்கு சிறந்ததாக இருக்கும்.
இதை மத்திய அரசிடமும், பிரதமரிடமும் எடுத்துரைக்க உள்ளோம். அதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்கவில்லை. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்போம் என்றார் உம்மன்சாண்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications