இந்தப் பூமியையும் நாம கெடுக்காம இருக்கனுமே மக்களே!
ுதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகங்களையும் மனிதர்கள் கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எழுந்துள்ளது.
டெல்லி: பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி போன்ற புதிய கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இதேபோல ஏற்கனவே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற போதிலும் இந்த 7 புதிய கிரகங்களில் மூன்றில், மனிதர்கள் வசிக்க்க கூடிய சூழல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அதாவது பூமியைப் போலவே இவை இருக்கின்றன. நீ்ர் ஆதாரம், காற்று என பூமியின் சூழல் அங்குள்ளதாக நாசா கூறுகிறது. இந்தப் புதிய கிரகங்கள் அளவிலும் கிட்டத்தட்ட பூமியை ஒத்து உள்ளன அல்லது அதை விட சற்று சிறிதாக உள்ளன.
இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த கிரகங்களிலேயே இதுதான் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் நாசா வர்ணித்துளளது. காரணம் இந்த கிரகங்கள் கிட்டத்தட்ட பூமி போலவே உள்ளது.

புதிய பங்காளி
இந்த புதிய கிரகங்கள் டிராப்பிஸ்ட் 1 என்ற நட்சத்திரத்தை (அதாவது இவர்களின் சூரியன்) சுற்றி வருகின்றன. இந்த நட்சத்திரமானது மிகவும் சிறியதாக உள்ளது. கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் போலவே இந்த சூரியக் குடும்பமும் உள்ளன. கிட்டத்தட்ட நமது பங்காளி மாதிரி.

மிகப் பெரிய கண்டுபிடிப்பு
கிட்டத்தட்ட ஒரு புதிய சூரியக் குடும்பத்தையே நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைக்காட்சி கண்டுபிடித்துள்ளது. இது மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இதுவரை இவ்வளவு பெரிய சூரியக் குடும்பம், அதுவும் வசிக்கக் கூடிய வகையிலான கிரகக் கூட்டத்தை நாசா கண்டுபிடித்ததில்லை.

2வது வீட்டை நெருங்கிட்டோம்
இதுகுறித்து நாசாவின் அறிவியல் ஆய்வு இயக்குநரகத்தைச் சேர்ந்த தாமஸ் சூர்புச்சன் கூறுகையில், பூமிக்கு அடுத்து வசிப்பிடத்தைத் தேடி வரும் நாம் கிட்டத்தட்ட அதை நெருங்கி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்றார்.

குளிர்ந்த சூரியன்
டிராப்பிஸ்ட் 1 சூரியனானது நமது சூரியனைப் போல கிடையாது. மாறாக குளிர்ச்சியானது. நமது சூரியனின் வெப்பத்தை விட பாதி வெப்பமே இதனிடம் உள்ளது. எனவே இதைச் சுற்றியுள்ள ஏழு கிரகங்களில் பாதி குளிர்ச்சியானவையாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிரது.
கெடுக்காம இருக்கனுமே
சீக்கிரமே இந்த கிரகங்களில் ஒன்றுக்கு மனிதர்கள் பால் காய்ச்சி குடியேறுவார்கள் என நம்புவோம்.. ஆனால் இந்தப் பூமியையும் நாம் கெடுக்காம இருக்கனுமே மக்களே!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications