ரூ.13,000 கோடி நெடுஞ்சாலை திட்டத்துடன் 'வேலையை' ஆரம்பிக்கப் போகும் நரேந்திர மோடி!
டெல்லி: மத்தியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதல் வேலையாக ரூ. 13,000 கோடி மதிப்பிலான சாலை திட்டத்தை செயல்படுத்த தயாராகிவருகிறது. இதில் டெல்லி-மீரட் இடையேயான 16 வழிச் சாலையும் அடங்கும்.
இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியாரின் கூட்டுடன் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை பணிகளை தொடங்க திட்டம் தயாராக உள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் பணிகள் தொடங்கும். எங்கள் துறையில் முடிக்க வேண்டிய பணிகள் முடிவடைந்துவிட்டன. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் டெண்டர் பணிகளை துவக்கி விடுவோம் என்றார்.

ஓடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான்...
இந்த திட்டத்தின் மூலமாக, ஓடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிப்பாதைகளாக மாற்றப்படும்.

டெல்லி- மீரட் 16 வழிச்சாலை....
டெல்லிக்கும் குஜராத் மாநிலம் மீரட்டுக்கும் நடுவேயான 150 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் 27 கிலோமீட்டர் தூரம், 16 வழிச்சாலைகளாக மாற்றப்படும். இந்த சாலை திட்டத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே செயல்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் முடியாமல் போனது.

நெடுஞ்சாலை பணிகளில் சுணக்கம்
கடந்த ஒரு வருடமாக நெடுஞ்சாலை பணிகளில் மிகவும் சுணக்கம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பல திட்டங்களுக்கு கிடைக்காததும், பொருளாதார மந்தநிலையும்தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

2010 முதல் 12 வரை ஓ.கே....
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி வகித்த 10 ஆண்டுகளில், 2010 முதல் 2012 வரையிலான கால கட்டம் சாலைப் பணிகளுக்கான பொற்காலமாக பார்க்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ரூ.1.47 லட்சம் கோடி செலவில் 147 சாலை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications