ஜிஎஸ்டி பதிவு செய்ய புதிய சாஃப்ட்வேர் வெளியீடு
ஜிஎஸ்டி வரிவிதிப்பின்கீழ் வணிகர்கள் பதிவு செய்து கொள்ள உதவும் வகையில், புதிய மென்பொருள் ஒன்று சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஜிஎஸ்டி முறையில் வணிகர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள புதிய மென்பொருளை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல், நாடு முழுவதும் ஒற்றை சரக்கு சேவை வரியை ஜிஎஸ்டி என்ற பெயரில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலமாக, ஒவ்வொரு சேவை மற்றும் வர்த்தகப் பொருளுக்கும் விதிக்கப்படும் பல்வேறு வரிவிதிப்புகள் மறைந்து, ஒற்றை வரியே விதிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவிக்கிறது.

ஆனால், இதன்மூலமாக, விலைவாசியை மத்திய அரசு மறைமுகமாக ஏற்றிவிட்டதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், சிறு, குறு தொழில் செய்வோர், தங்களை நசுக்கும் வகையில், ஜிஎஸ்டி அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைவிட முக்கியமாக, பலருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் தங்களை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் எழுந்துள்ளது. முன்னணி ஆடிட்டர்கள் கூட, இந்த விவகாரத்தில் சற்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக உதவும் நோக்கில், டேக்ஸ்மேன் நிறுவனம், புதிய மென்பொருளை வடிவமைத்து, அறிமுகம் செய்துள்ளது.
ஜிஎஸ்டி சேவைகளை ஆன்லைனில் செய்து தரும் பணியில் ஈடுபட்டுள்ள டேக்ஸ்மேன் நிறுவனம், இதில் அனைத்து மக்களும் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில், ஒன் சொல்யூசன் என்ற பெயரில் புதிய மென்பொருளை கொண்டு வந்துள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து மாதம் அல்லது வாரக்கணக்கில் வருமான விவரங்களை சேகரித்து, அதற்கேற்ப ஜிஎஸ்டி செலுத்திக் கொள்ளலாம் என்று டேக்ஸ்மேன் குறிப்பிட்டுள்ளது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி!












Click it and Unblock the Notifications