ரூ. 42 லட்சம் கொள்ளை போனதாக டிராமா: 'மாமியார்' வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பட்டபகலில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் ரூபாய் 42 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அருகே அண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் . இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை இவர் அழுதபடியே பூஜப்புரா காவல் நிலையம் வந்தார்.
பணத்தை பறித்துச் சென்றதாக புகார்:
அப்போது அவர், தான் வீடு வாங்குவதற்காக காரில் ரூபாய் 42 லட்சம் பணத்துடன் வந்ததாகவும், பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாகவும் கூறினார்.
கிடுக்கிப்பிடி விசாரணை:
இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அசோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குட்டு வெளிப்பட்டது.
வீடு வாங்குவதாக நாடகம்:
இது குறித்து போலீசார் கூறுகையில், "அசோகன் பெண் வீட்டாரிடம் தான் ஒரு வீடு வாங்க போவதாக கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மணப்பெண்ணை அழைத்துச் சென்று தான் வாங்க போவதாகக் கூறி ஒரு வீட்டையும் காண்பித்துள்ளார்.
அட்வான்ஸ் தொகை:
இந்நிலையில் நேற்று வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 42 லட்சத்தை கொடுக்க போவதாகவும் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவரிடம் வீடு வாங்குவதற்கான பணம் கிடையாது.
பெண் வீட்டாரிடம் பணம் பறிக்க திட்டம்:
அந்த பணத்தை பறிபோனதாக நாடகமாடி பெண் வீட்டாரிடம் இருந்து வாங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்திலே குட்டு வெளிப்பட்டது" என்றனர். போலீசார் அசோகனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications