'ஒன்இந்தியா' செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது!
கடந்த 18 வருடங்களாக பத்திரிகை துறையில் விக்கி நஞ்சப்பா வழங்கிய பங்களிப்புக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான விருது அவருக்கு கிடைத்துள்ளது.
மும்பை: ஒன்இந்தியாவுக்கு இது பெருமித தருணம். ஒன்இந்தியா (ஆங்கிலம்) செய்தி இணைய தளத்தின், சிறப்பு செய்தியாளர் விக்கி நஞ்சப்பா சிறந்த பத்திரிகையாளருக்கான (டிஜிட்டல் மீடியா) விருதை பெற்றுள்ளார். மும்பையில் நடைபெற்ற 8-வது, 'Newsmakers Achievers' விழாவின்போது இந்த விருதை விக்கி நஞ்சப்பா பெற்றார்.
கடந்த 18 வருடங்களாக பத்திரிகை துறையில் விக்கி நஞ்சப்பா வழங்கிய பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. தொழிலாளர் தினமான மே 1ம் தேதி நடைபெற்ற இந்த விழாவின்போது, பத்திரிகை துறை மட்டுமல்லாது, கலை, அறிவியல், அரசியல், கல்வி போன்ற பல துறைகளிலும் சாதனைபடைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கும், திராவக வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது. பத்திரிகை துறையில் விக்கி நஞ்சப்பா விருது பெற்ற நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பண்டிட் பிர்ஜு மகராஜ் மற்றும் பிரதீப் வெலான்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. திவாகர் ரயோடேவுக்கு சிறந்த அரசியல்வாதிக்கான விருது வழங்கப்பட்டது.
ஆன்மீக தலைவருக்கான விருது ஆஷா வாரியாருக்கும், சிறந்த டாக்டருக்கான விருது டாக்டர்.முகேஷ் பத்ராவுக்கும் வழங்கப்பட்டது. தீபக் போஸ்லே சிறந்த கல்வியாளர் விருதை பெற்றார்.

விராக் குப்தா சிறந்த வழக்கறிஞருக்கான விருதையும், தீப் ஹைதர் சிறந்த பத்திரிகையாளர் (எடிட்டர்) விருதையும் பெற்றனர். ரஷித் ஹஸ்மி சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை பெற்றார். பிரிண்ட் மீடியாவின் சிறந்த பத்திரிகையாளர் விருதை வருண் சிங் பெற்றார். அனில் நக்பாலுக்கு சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது கிடைத்தது. நந்திதா வெங்கடேசனுக்கு சிறந்த நிருபர்/எழுத்தாளருக்கான விருது கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான விருது தர்ஷன் குமாருக்கும், சிறந்த நடிகைக்கான விருது மேக்னா மாலிக்கிற்கும் கிைடத்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications