ராம்நாத் கோவிந்த்திற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு.. உறுதியாகும் பாஜக வெற்றி
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்துள்ளார். இதனால் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி வருகிறது.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

ஆதரவு கேட்ட மோடி
இதனைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளட்ட மாநில முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். அதனைத் தொடர்ந்து ராம் நாத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

நிதீஷ் ஆதரவு
பாஜக அறிவித்துள்ள ராம் நாத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்து அறிவித்துள்ளார். மேலும் அவருடன் கூட்டணியில் உள்ள லாலுவும் நேற்று ராம்நாத்தை ஆதரித்துள்ளார். மேலும், சிறப்பான வேட்பாளர் ராம் நாத் என்றும் லாலு கூறினார்.

பழனிச்சாமி ஆதரவு
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்
இதேபோன்று ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் ராம் நாத் கோவிந்த்தை ஆதரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராம் நாத் கோவிந்த்தின் வெற்றி உறுதியடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications