எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தல்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்படவுள்ளது.
டெல்லி: பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை முடிவு செய்ய வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளராக தங்களது கட்சியை சேர்ந்தவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதற்கான ஆலோசனைகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டி போட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகின்றன.

ஜார்க்கண்ட் ஆளுநர்
பாஜக சார்பில் ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது. இதற்காக அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. அதில் அதிமுக வாக்குகளை மிரட்டியே வாங்கி விடலாம்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை பெரிய கூட்டணியை அமைத்து வேட்பாளரை களம் இறக்கவுள்ளது. இக்கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைக்க அது முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

வேட்பாளர்கள் யார்
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கோபால் கிருஷ்ண காந்தி, சரத் யாதவ் மற்றும் மீரா குமார் ஆகியோரின் பெயர்களை பரிசீலித்து வருகின்றன. எனினும் சரத் பவார் இதை மறுத்துள்ளார். பிரணாப் முகர்ஜியையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஆலோசனை
இந்நிலையில் தங்கள் வேட்பாளர் குறித்து வரும் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் யாராலும் எதிர்க்க முடியாத, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருமித்த வேட்பாளரை நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications