ஜனாதிபதி தேர்தல்.. மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராம் நாத் கோவிந்த்
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் ராம் நாத் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மோடி முன்னிலை
பிரதமர் மோடியின் முன்னிலையில் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர்.

ஆதரவு
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக பழனிச்சாமி, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக், சந்திர சேகர் ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராம் நாத் கோவிந்துக்கு கிட்டத்தட்ட 61 சதவீத ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications