மடிந்துபோன மனிதநேயம்.. கெட்டுப்போன சாப்பாடு, ரத்த கறை படிந்த ஆடைகள் தானம்! தொண்டு நிறுவனம் கொதிப்பு
டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடை மனிதாபிமானமற்ற முறையில் இருப்பதாக அந்த நிறுவனம் பேஸ்புக்கில் காரமாக பதிவு செய்துள்ளது. இப்படிப்பட்டவர்கள் பெயர் விவரங்களை வெளியிட்டுவிடுவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நகரங்களிலும் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம், 'கூஞ்ச்'. ஊரக மேம்பாடு மற்றும் குடிசைபகுதி வளர்ச்சிக்காக அந்த அமைப்பு பாடுபட்டுவருகிறது.

கிழிசல், கறைகள்
இதற்காக உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை அந்த அமைப்பு சேகரிப்பது வழக்கம். ஆனால், என்.ஜி.ஓ அமைப்பை, ஏதோ குப்பைகள் கொட்டும் இடம்போல நினைத்த 'கனவான்கள்' பலர், தங்களிடமிருந்த கெட்டுப்போன சாப்பாடுகளையும், கிழிந்த மற்றும் ரத்தக்கறை உள்ளிட்ட கறை நிறைந்த ஆடைகளையும் அந்த அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் காட்டம்
இதையெல்லாம் பிரித்து பார்த்த என்.ஜி.ஓ நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தங்கள் பேஸ்புக் பதிவில் இப்படி பதிவிட்டுள்ளனர்: நாங்கள் ஒரு செய்தியை சத்தமாகவும், தெளிவாகவும் சொல்ல ஆசைப்படுகிறோம்.. இது ஒரு குப்பை கிடங்கு கிடையாது. அழுகி போன பொருட்கள் முதல், ரத்தக்கறை படிந்த உள்ளாடைவரை அனுப்பியுள்ளீர்கள். இதை யாரும் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள்.

பெயர் வெளியிடுவோம்
எங்கள் குழுவை அவமரியாதை செய்யும் போக்கை நிறுத்திக்கொள்ளுங்கள். மனிதாபிமானத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் நாம் என்ற செய்தியை உலகுக்கு அளியுங்கள். இவ்வாறு பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட அழுகல் மற்றும் கிழிசலான பொருட்களின் போட்டோக்களும் பகிரப்பட்டுள்ளன. மேலும், இதேநிலை நீடித்தால், தானம் செய்தோர் பெயர் விவரம் வெளியிடப்பட்டு அசிங்கப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டை கூடவா..?
இதுகுறித்து அந்த என்.ஜி.ஓவை சேர்ந்த சிலரிடம் பேசியபோது, "ஆடையில் கறை இருப்பதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் கெட்டுப்போன பதார்த்தங்களை தானமாக தருவதால் என்ன லாபம்? பசியில் உள்ளோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டால் அவர்கள் உடல்நிலை என்னவாகும் என்று நினைக்க வேண்டாமா?" என்று ஆதங்கம் வெளிப்படுத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications