டெல்லியில் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கு ஒரு வாரம் தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு 1 வார காலம் தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமானப் பணிகளுக்கு ஒருவாரம் அதிரடி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
டெல்லியில் காற்று மாசு அளவுக்கு மிக அதிகளவு அதிகரித்துள்ளது ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து டெல்லி மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது; கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லியில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் 1 வாரம் தடை விதித்துள்ளது. அத்துடன் விவசாய கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்த பஞ்சாப் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? விவசாய கழிவுகளை எரிக்காமல் இருக்க நீங்கள் விவசாயிகளுக்கு ரூ1,000 உதவி தொகை கொடுத்தால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியது.
முன்னதாக நேற்று பசுமை தீர்ப்பாய விசாரணையில், காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளாத டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு என்ன செய்தது? சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? ஹெலிகாப்டர் மூலம் செயற்கை மழை பொழிய செய்து தூசு பரவுவதை தடுக்க முடியாதா? அதிகாரிகள் பறப்பதற்கு மட்டும்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துவீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியது பசுமை தீர்ப்பாயம்.
மேலும் வயல்வெளியில் விவசாயக் கழிவுகளை எரிப்போர் மீது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications