என்.ஐ.ஏ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
டெல்லி: என்.ஐ.ஏ அதிகாரி தன்சில் அகமது டெல்லி அருகே சாலையில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு வழக்கு தொடர்பாக, 35 வயது மதிப்புள்ள குற்றவாளியை காசியாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளியிடமிருந்து 9 பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான முனீர், இதற்கு முன்பு மேலும் 2 கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்சில் அகமது (45), கடந்த ஏப்ரல் 3ம் தேதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, குடும்பத்தோடு வேகன்-ஆர் ரக காரில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு பைக்கில் வந்த இரு நபர்கள், இடையில் வழிமறித்து, தன்சில் அகமதுவை சுட்டு கொலை செய்தனர்.
மொத்தம், 24 ரவுண்டுகள் சுடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் தன்சில் அகமது. இந்த தாக்குதலில் தன்சில் மனைவி பர்சானா கதூனும் கொலை செய்யப்பட்டார்.
அதேநேரம், தந்தையின் அறிவுரையை கேட்டு, சட்டென சீட்டுக்கு அடியில் குனிந்து பதுங்கிக்கொண்ட தன்சில் அகமதுவின் 14 மற்றும் 12வயதுள்ள இரு குழந்தைகளும் உயிர் தப்பினர்.
சொத்து தகராறு அல்லது தனிப்பட்ட விரோதம் இக்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. தன்சில் அகமதுவின் குடும்பத்தாரில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications