பஹல்காம் தாக்குதல்: பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்.. என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடா்பிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் ஏப்ரல் 26 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என்பதால் பாகிஸ்தான் அரசு கடும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பிருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் லஷ்கர் - ஏ - தொய்பா பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக என்ஐஏ விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், தாக்குதல் சம்பவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பிற பொருள்களை காஷ்மீரைச் சேர்ந்த அந்த 20 நபர்கள் வழங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் உதவிகளையும் செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஹல்காமில் தாக்குதல் எப்போது நடத்த வேண்டும், நேரம், ஆயுதம் குறித்து பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக நிசாா் அகமது என்கிற ஹாஜி, முஷ்தாக் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஹஷ்மி மூசா என்ற சுலைமான், அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகியோா் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 3 செயற்கைக்கோள் செல்போன்களின் சிக்னல் மூலம் 2 செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications