டெல்லியில் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் பறிமுதல்! நைஜீரிய நாட்டவர் கைது!!
டெல்லி: டெல்லியில் நைஜீரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று நைஜீரிய நாட்டவர் ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது உடமைகள் வேறொரு விமானத்தில் வந்துள்ளன.

பின்னர் விமான நிலையத்துக்கு வந்து உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஹோட்டலில் சேர்ப்பித்துவிடுமாறு விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எஞ்சிய உடைமைகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு நைஜீரிய நாட்டவரிடம் உடைமைகளை கொடுத்து சோதனை நடத்தினர். அப்போது 8 கிலோ எடையுள்ள கோகைன் போதைப் பொருளை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ40 கோடி. இதையடுத்து அந்த நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications